வினாக்கள் அனைத்தும் நேரடியாக கேட்கப்படவில்லை... போட்டித்தேர்வு பாணியில் புத்தகம் முழுக்க படித்து புரிந்த மாணவர் விடையெழுதும் வகையில் இருந்தது. நுட்பமாகவும் சிந்தித்து விடையளிக்கும் வகையில் அமைந்தது...
வகுப்பறையில் கற்றல் கற்பித்தல் செயல்பாட்டினை கூர்ந்து கவனித்து உள்வாங்கியதை விடையளிக்கும் நிலையில் இருந்தது... அரசால் நடத்தப்பட்ட வழங்கப்பட்ட திருப்புத்தேர்வு வினாத்தாளிலிருந்து கூட வினாக்கள் வரவில்லை... மாதிரிவினாத்தாள் முறைப்படி யும் வினாக்கள் கேட்கப்படவில்லை... தற்போது 11ம்வகுப்பு மாணவர்க்கு எவ்வாறு வினாத்தாள் கேட்கப்பட்டதோ அதைப்போலவே தேடி எடுக்கப்பட்டுள்ளது... கடந்த கால வினாத்தாளிலிருந்து பெரும்பான்மையான வினாக்கள் கேட்கவில்லை.. வரிக்கு வரி பாடங்களை படித்து வினாவாக மாற்றி ,விடைகளை படிக்கும் ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு போல இருந்தது... வினாத்தாள் திட்டவரைவு Blue Print உள்ளபடி அதற்குப்பட்ட பாடங்களிலிருந்து கேள்வி கேட்கப்பட்டது ஆனால் நேரடி மாதிரிபுத்தக வினாக்களை கேட்கமால் ,பாடப்பகுதியின் உள்ளிருந்து சிந்தித்து பதிலளிக்கும் வகையில் இருந்தது... மொத்தத்தில் இந்த வினாத்தாள் மிகவும் பின்தங்கிய ,திறன்குறைந்த மாணவர்க்கு கடினமாகவே இருக்கும்... மனப்பாட முறையை மாற்றி , மாணவர் சுயமாக விடையளிக்கும் முறையில் கேள்வி வந்தது.. நமக்கு மகிழ்ச்சியே... ஒரு மாற்றத்திற்க்கான முதல்முயற்சி... சிவ எம்கோ தமிழாசிரியர் தேர்வு பற்றிய வாட்ஸப் பதிவு 1. 100 மதிப்பெண் எடுப்பது கடினம் 2. பாடத்திற்கு உள்ளிருந்து புதிய வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன 3. Blue print படி வினாக்கள் 75 % கேட்கப்பட்டுள்ளன 4. Blue Print படி வராத வினாக்களுக்கு, தமிழாசிரியர்கள் வழக்கம் போல் கருணை மதிப்பெண் கேட்பார்கள். 5. மாணவர்கள் தேர்ச்சி அடையும் அளவிற்கு வினாக்கள் இருப்பதால் கருணை மதிப்பெண் தரத் தேவையில்லை. 6. இனி வரும் காலத்தில் இப்படி வினாத்தாள் அமையும் எனில், கற்றல் விளைவுகள் நன்றாக அமையும். புதிய பாடத்திட்டம் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் புளூ பிரிண்ட் படி வினாக்கள் கேட்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டது. புளூ பிரிண்ட் படி வினாக்களைக் கேட்பதால் மாணவர்கள் அனைத்துப் பாடங்களையும் தெளிவுறப் படிப்பதில்லை. அதனால் நீட் தேர்வில் தோல்வியைத் தழுவும் வாய்ப்பு உள்ளது. ஆகவே வினாக்கள் தயாரிப்பின் இம்மாற்றம் உண்டு என கல்வியியலாளர்கள் கூறினார்கள்.அதன் படியே நடந்து விட்டது போலுள்ளது. தேர்ச்சி பெறவே இயலாத மாணவனைத் தேர்ச்சி பெற வைக்க கரணம் போட்டு, பல பயிற்சிகளை எடுக்கச் செய்து புதியமுறைகளைப் புகுத்திட மாணவன் சோதனை எலியா? 75% எழுதவதில் பிழைகளுக்கு மதிப்பெண் குறைத்தால் முடிந்தாயிற்று. அரசுப்பள்ளி மாணவனின் அரசுப்பள்ளி ஆசிரியனுக்குத் தான் தெரியும். ஆனால் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் தனியார்ப் பள்ளி தோழமைகளுக்குத் தெரியுமா? 100% தேர்ச்சி கேட்கும் அரசுப்பள்ளி ஆசிரியரின் நிலை. கிராமப்புற, பொருளாதார பின்னடைவு நிலையால் பாதிக்கப்பட்டு பள்ளிக்கு வருவதே இக்கட்டானச் சூழல் என்ற மாணவனின் நிலை??!!! இது மாணவர்களின் திறனை மதிப்பிட எடுக்கப்பட்ட வினாத்தாள் அல்ல..... 😳😲 மாறாக , வினாத்தாள் எடுத்தவர்கள் தங்களுடைய திறமையை😆😅😅 வெளிக்காட்டி இருக்கிறார்கள்........... 😭😤😨😱😩மெல்ல கற்கும் மாணவர்களுக்கு மிகுந்த பின்னடைவு இந்த வினா அமைப்பு.
0 Comments
Leave a Reply. |
Details
namma kalvi.orgRecent News, Posts, Important Information POSTS
December 2018
|