டில்லி.. ஆதார் இல்லாத மாணவர்களை பள்ளியில் சேர்க்க மறுக்கக் கூடாது என பள்ளிகளுக்கு மத்திய அரசின் தனி நபர் அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.
பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க ஆதார் எண் அவசியம் என ஒரு சில மாநிலங்கள் அறிவித்துள்ளன. பல மாணவர்களிடம் ஆதார் எண் இல்லாததால் அந்த மாணவர்கள் பள்ளிகளில் சேர இயலாத நிலை ஏற்பட்டது. இது குறித்து பெற்றோர்கள் புகார் அளித்தனர். இதை மத்திய அரசின் தனி நபர் அடையாள ஆணையம் ஆய்வு செய்தது. அதை ஒட்டி அந்த ஆணையம் இன்று அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கும் ஒரு சுற்றரிக்கை அனுப்பி உள்ளது. அந்த அறிக்கையில், "பல பள்ளிகளில் ஆதார் எண் இல்லாததால் மாணவர்களை பள்ளியில் சேர்க்க மறுப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த சுற்றரிக்கை மூலம் ஆதார் எண் இல்லாத மாணவர்களை பள்ளியில் சேர்க்க மறுக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிகளில் சேர்ந்த பின்னர் ஆதார் எண்ணைப் பெற்று பிறகு அந்த எண்ணை இணைக்கலாம். அது வரை வேறு அடையாளங்களை பெற்று மாணவர்களை பள்ளியில் சேர்க்கலாம். தற்போது வங்கிகள், தபால் நிலையங்கள், நகராட்சி அலுவலகங்கள் ஆகிய இடங்களில் ஆதார் முகாம்கள் நடைபெறுகின்றன. பள்ளிகள் இந்த முகாம்களின் உதவியுடன் மாணவர்களுக்கு ஆதார் பெற்றுத் தரலாம்" என குறிப்பிட்பட்டுள்ளது.
0 Comments
Leave a Reply. |
Details
namma kalviTAMIL GENERAL NEWS |